தென் கொரியாவில் 4 லட்சம் பேருக்கு கொரோனா..!
தென்கொரியாவில் புதிதாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரொனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 6 நாட்களாக சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 880 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் கூறுகையில் 4 லட்சத்து 77 பேருக்கு கொரொனா தொற்று பதிவாகியுள்ளது எனவும் இது கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்ததில் இருந்ததை விட மிக அதிகம் எனவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





