--- --:--:-- --

ஜப்பானை மீண்டும் அச்சுறுத்திய நிலநடுக்கம்..!

1

ஜப்பானின் புகுஷிமா அருகே வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவின் வடகிழக்கில் 8 அங்குல உயரத்திற்கு கடல் அலை எழும்பியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஜப்பானில் சரியாக 11 ஆண்டுகளுக்கு முன் ரிக்டர் அளவில் 9.0 அளவில் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் அணுமின் நிலையங்கள் பாதித்தன.

 

அப்போது வெளியான அணுக்கதிர் வீச்சின் தாக்கம் இன்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இந்த சூழலில் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. பலசரக்கு கடையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon