மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு..!
விளிம்புநிலை மனிதர்கள் பட்டியலின பழங்குடியின மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாநாடு இரண்டாம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மாநில அரசின் திட்டம் சென்றடைய வேண்டும் என்றும் அதற்கு ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் விளிம்புநிலை மக்கள் பட்டியலின மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் தேவைகளை பூர்த்தி செய்வது முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். மக்களுக்கும் அரசுக்கும் இடையே மாவட்ட ஆட்சியர்கள் பலமாக இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.






