5ஆம் வகுப்பு மாணவியை அடித்த மற்றொரு மாணவியின் தாய்..!
காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அடித்து உதைத்த மற்றொரு சிறுமியின் தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேடல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனை மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்றார். பள்ளி வகுப்பிற்கு வந்து சிறுமியை அவர் காயப்படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் எடுத்துக் கூறியும் கேட்காமல் அந்த சிறுமியை தாக்கியுள்ளார்.
உடல்நிலை மோசமானதால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தாய் மேகலா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சிறுமியை கண்மூடித்தனமாக தாக்கிய மேகலா மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






