--- --:--:-- --

இன்று 23 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

5

மிழகம் முழுவதும் இன்று 23வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் இதுவரை 10 கோடி கொரொனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

97.5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று 23வது தடுப்பூசி முகாம் நடைபெறும் வேளையில் 92 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Right Menu Icon