சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பில்லை..!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஆரியன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையிலிருந்து போபால் சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கலந்து கொண்டதாகவும் அவரிடமிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டதாக கூறி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
ஒரு மாத காலம் சிறையில் இருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்னும் சில மாதங்களில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆரியன் கானுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





