என்னை மார்பக சிகிச்சை செய்ய சொன்னார்கள் எனக்கூறிய தீபிகா படுகோன்..!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மார்பக சிகிச்சை செய்யச் சொன்னார்கள் என ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். தீபிகா படுகோனிடம் நடந்த மோசமான ஆலோசனை என்னவென்று கேட்டபோது அவர் கூறுகையில் நான் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தபோது எனது 18 வயதில் என்னிடம் மார்பக அறுவை சிகிச்சையை செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள்.
ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல ஆலோசனைகளை பொறுத்தவரை எப்பொழுதும் தெரிந்தவர்களுடன் பணியாற்றுங்கள் என சாருக்கான் பேசியதை நான் பின்பற்றி வருகிறேன் என கூறியுள்ளார்.






