மாணவர்களை மீட்க பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்..!
உக்ரைனில் சிக்கியுள்ள கேரள மாணவர்களை தாயகம் அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பியிருக்கிறார்.
உக்ரைனில் உள்ள கார்கீவ் மற்றும் சுமி பகுதிகளில் இந்திய மாணவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் அவர்கள் ரஷ்யாவின் வழியாக வெளியேற நடவடிக்கை எடுக்க .வேண்டும் என்றும் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்அங்குள்ள மாணவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எல்லை தாண்டி செல்ல உக்ரைன் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






