நடிகை திரிஷாவை பேட்டி எடுக்க சென்ற நடிகை அஞ்சலி..!
தமிழ் திரையுலகில் கடந்த 19 வருடமாக கொடிகட்டி பறந்து வரும் முன்னணி கதாநாயகி திரிஷா. இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை திரிஷாவின் ஆரம்பகால கட்டத்தில், அவரை பேட்டி எடுக்க நடிகை அஞ்சலி சென்றுள்ளார். அப்போது மாடலாக இருந்த நடிகை அஞ்சலி, நடிகை திரிஷாவுடன் பேட்டியில் உடையாடி கொண்டிருந்த போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா மற்றும் நடிகை அஞ்சலி இருவரும் இணைந்து அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா, ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






