14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
ராமநாதபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராமநாதபுரத்தில் கீழக்கரையில் 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபர் கடந்த 2011ல் முகமது என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது.
விசாரித்த நீதிபதி முகமதுவிற்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் இயற்கை மரணம் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.





