ஆன்லைன் உயர்கல்வியால் மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை இருக்காது..!
ஆன்லைன் கல்வி முறையால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்பதே இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் கல்வித்துறைக்கு எவ்வாறு ஊக்கமளிக்கும் என்பது குறித்தும் இணையவெளியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறிய பிரதமர் கடந்த ஆண்டை விட இது 11 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் என்றார்.
உலகத்தரம் வாய்ந்த வெளிநாடு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அமைக்க அனுமதி தரப்பட்டு உள்ளதாக கூறிய பிரதமர் கொரொனா பெருந் தொற்று காலத்தில் கல்வியை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆன்லைன் கல்வி உதவியதாக தெரிவித்தார்.





