மாஸ்டர் விஜய் போல தோற்றம் கொண்ட நபர் பிரச்சாரம்..!
மதுரை மாநகராட்சியில் 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட நபர் ஓடும் பேருந்தில் ஏறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. பிரதான கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட கூடிய பெண் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக நடிகர் விஜய் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் அழைத்துவரப்பட்ட தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







