ஹிஜாப் விவகாரத்தில் தேசிய பிரச்னையாக்க வேண்டாம்..!
ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றி விடாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.
கர்நாடகாவில் விஸ்வரூபமெடுக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கூடுதலாக பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பள்ளி கல்லூரிகளின் சீருடையில் உள்ள மருத்துவ மாணவர்கள் செல்ல வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கர்நாடக மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கர்நாடகத்தில் ஹிஜாபை தேசியப் பிரச்சினையாக யாரும் மாற்றி விடாதீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறியுள்ளார். தேவைப்படும் நேரத்தில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்று கூறி உடனடியாக மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தார்.






