உத்திர பிரதேசத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!
உத்திரபிரதேசத்தின் சட்டமன்றத்திற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாம்லி, லூசிபர், காசியாபாத், அலிகார் ஆந்திராவில் 16 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள இந்த 11 மாவட்டங்களில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஓட்டு பெரும்பாலும் இந்த பகுதியில் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளை பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.






