இஸ்லாமிய பெண்களை புறந்தள்ளுவதை நிறுத்த வேண்டும்..!
ஆடையை காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க தடுக்க வேண்டாம் என நோபல் பரிசு பெற்றவரும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் போராளியுமான மலாலா யூசப் கூறியுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் நடந்து வரும் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மலாலா யூசுஃப் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது என்றும் இஸ்லாமிய பெண்களை ஒதுக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஆடையை காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பெண்களின் ஆடை குறைந்தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.






