சீறிப்பாய்ந்த நல்லப்பாம்பை பதறாமல் பிடித்த பெண் வனத்துறை அதிகாரி.!
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நல்ல பாம்பை இலாவகமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டகடா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நல்ல பாம்பு புகுந்ததையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறை அதிகாரி ஜிஎஸ் ரோஷினி பாம்பை பிடிக்க களத்தில் இறங்கினார்.
சீறிப்பாய்ந்த நல்லபாம்பு பலமுறை ரோஸினியை கடிக்க முயன்றது. ஆனால் ரோஷினி எந்தவித பதட்டமும் இன்றி சரியாக கையாண்டு பாம்பை பிளாஸ்டிக் பைக்குள் நுழைத்து பையில் பிடித்து கட்டினார்.
இதனை பதற்றத்துடன் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், வனத் துறை அதிகாரி ரோஷனின் செயலை வெகுவாக பாராட்டினர். ரோஷினி திருவனந்தபுரம் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற வனக்காப்பாளர் ஆவார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





