--- --:--:-- --

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு ரஜினி தான் காரணமா..?

4

ஜினியின் போயஸ் கார்டன் வீடுதான் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

 

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரிவுக்கான காரணம் என நாள்தோறும் ஒரு புது புது தகவல் வெளியாகி வருகிறது. தற்போது ஐஸ்வர்யா கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில் இருவருக்குமிடையிலான பிரச்சனைக்கு போயஸ் வீடு தான் என காரணமாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ்கார்டன் வீட்டை சில மாதங்களுக்கு முன்பு தனது இளைய மகளுக்கு ரஜினி எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

 

ஆரம்பத்திலிருந்தே நடிகர் தனுஷுக்கு போயஸ் வீட்டின் மேல் ஆர்வம் இருந்ததாகவும், தற்போது வீடு கையைவிட்டு போனதால் இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon