--- --:--:-- --

லாரி மீது மோதியதில் பின் சக்கரத்தில் தலை சிக்கி உயிரிழப்பு..!

2

தூத்துக்குடி அருகே நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக சென்ற லாரியின் பின்பக்க மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

புதிய துறைமுகம் பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த சின்ன கண்ணு புரத்தை சேர்ந்த மணிகண்டன் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியில் டிப்பர் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

 

அதை கவனிக்காத மணிகண்டன் அதிவேகமாக சென்ற லாரி மீது மோதியது. அவரது தலை பின் பக்கம் சக்கரத்தில் மற்றொரு பகுதியில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon