சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம்..!
நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்கிற சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து நாளை தமிழக தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் விலக்குக்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கோரிக்கை விடுத்து பாஜக உட்பட அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில் வழக்கு தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.







