கணவர் கட்டாய உறவு கொள்வது குற்றமாகுமா..?
மனைவியின் சம்மதமின்றி கணவர் கட்டாயம் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாகும். இது தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றுள்ளது.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக பதில் அளித்து பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை திருமணம் என கண்டிப்பதும் ஆண்கள் வன்கொடுமை செய்பவர்கள் என கண்டிப்பதும் நல்லதல்ல என குறிப்பிட்டார்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அது குறித்து விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை அனுமதிக்காது எனவும் மாநில அரசுகளுடன் இணைந்து பெண்களைப் பாதுகாப்பது ஒன்றிய அரசின் முயற்சி எனவும் கூறியுள்ளார்.
மனைவியின் சம்மதம் இன்றி கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






