எலித்தொல்லைக்கு விஷம் கலந்த கேரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாப பலி..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் எலி மருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். பொள்ளாச்சி அடுத்த செங்கோட்டை பாளையத்தில் தேவன் என்பவர் மல்லிகை கடை நடத்தி வருகிறார். எலித் தொல்லையால் கேரட்டில் எலி மருந்தை தடவி கடையில் வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதை அறியாத கடை உரிமையாளரின் மகள் கேரட்டை சாப்பிட்ட நிலையில் மயக்கம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






