--- --:--:-- --

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது..!

1

அண்டை மாநிலங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்து வருவதாக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

 

இதை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அமைச்சர் தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 94 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon