20 டிகிரி குளிரில் விடப்பட்ட பச்சிளங்குழந்தை..!
20 டிகிரி குளிரில் விடப்பட்ட பெண் பச்சிளம் குழந்தை புகைப்படம் வைரலாகி வருகிறது. ஸ்பைரியா நாட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்து 3 நாட்களே ஆன அந்த பச்சிளம் குழந்தை ஒன்று தொலைவிலுள்ள அட்டைப் பெட்டிக்குள் இருந்துள்ளது.
அந்த பெட்டி அசைந்ததால் 5 இளைஞர்கள் அருகே சென்று பார்த்த பொழுது அதில் உள்ள பச்சைக் குழந்தை இருந்ததை பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த பச்சிளம் குழந்தையை எடுத்து சென்றனர்.
டாக்டர்கள் அந்த பச்சிளம் குழந்தையை பரிசோதித்த போது சிசுவின் உடல் நன்றாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அந்த குழந்தை வீட்டில் பிறந்ததாகவும் தொப்புள் கொடி கூட துண்டிக்கப்படாமல் இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்பொழுது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ள அந்த பச்சிளம் குழந்தை நன்றாக சாப்பிடுவதாகவும் உறங்குவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமையல் சிசுவை கைவிட்டு சென்ற அந்த பெற்றோரை கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






