முதலிரவு முடிந்தவுடன் நகை பணத்துடன் மாப்பிள்ளை எஸ்கேப்..!
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கேரளாவை சேர்ந்த நபர் முதலிரவு முடிந்த உடன் நகை பணத்துடன் மாயமான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அஸ்கருதின் என்பவருக்கும் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 31ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
பின்னர் இருவருக்கும் முதலிரவு நடந்து முடிந்த நிலையில் அன்றைய தினம் மனைவியின் 25 சவரன் நகைகள், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் மாயமானார். இதனையடுத்து பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்த நிலையில் முதல் மனைவி வீட்டில் இருந்தவரை கைது செய்தனர்.






