எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல்..!
கடலூரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கடத்தப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த மகாலக்ஷ்மி என்பவரும் கடந்த 27ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டவர்.
திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வடலூர் காவல் நிலைய போலீசாரிடம் சமாதானம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 31 காதல் தம்பதி இருவரும் கடத்தப்பட்டதாக தாமரைக்கண்ணனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.






