--- --:--:-- --

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் ..!

7

சென்னையில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற நபர் போலீசில் சரண் அடைந்தார். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் தளபதி, சண்முகப்பிரியா தம்பதி.

 

கப்பல் தொழிலாளியான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்து மனைவி, மகளை அடித்து துன்புறுத்துவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் வீட்டை தன் பெயரிலேயேஎழுதி தருமாறு கேட்டுள்ளார் சண்முகப்பிரியா.

 

நேற்று அது குறித்து கேட்கவே ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு சண்முகப்பிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் நேராக காவல் நிலையம் சென்று சரண் அடைந்து இருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon