--- --:--:-- --

தனுஷுடன் மீண்டும் சேர்கிறாரா ஐஸ்வர்யா..!

8

ரஜினிகாந்த் சொன்ன உண்மையை கேட்டு ஐஸ்வர்யா மனம் மாறி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் மாப்பிள்ளை தனுஷின் பிரிந்தது தெரிந்ததில் இருந்து அப்செட் ஆகிவிட்டாராம் ரஜினி. மகளையும், தனுஷையும் சேர்த்து வைக்க என்னவோ செய்து வருகிறாராம்.

 

இந்த சமயத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் ஐஸ்வர்யா அப்பாவிடம் பேசியபோது அவர் ஒரு உண்மையை கூறியுள்ளாராம். அது என்னவென்றால் எனக்கும் உன் அம்மாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் இரண்டு பெண்கள் இருக்கிறதே என்று உங்களுக்காக எல்லாத்தையும் தாங்கி கொண்டு இருந்துவிட்டேன்.

 

நான் மட்டும் என் வாழ்க்கை என் சந்தோஷம் தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் இன்றைக்கு உன் அம்மாவை விட்டு பிரிந்து போய் இருப்பேன் என கூறியுள்ளாராம். அப்பொழுது உனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

 

அவர்களை பற்றிய யோசனையே இல்லாமல் இப்பொழுது திடீரென விவாகரத்து முடிவு எடுத்துள்ளாய் என்று விவாதித்து உள்ளார். எனவே, ஐஸ்வர்யாவும் மனம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon