--- --:--:-- --

நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடலாம்..!

10

நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் சேவைகளை வழங்கும் முறையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

கைபேசி செயலி மூலம் மின்கட்டணத்தை கணக்கீடு செய்யும் முறையை வரும் 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் மேற்கொள்ள மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து நுகர்வோரே கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.

 

புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் குறுஞ்செய்தி வாயிலாக வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon