--- --:--:-- --

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

5

டிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரைதடை விதித்துள்ளது.

 

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி உட்பட 4 பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 26 பேரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தது . ஆனால் அவர்களை கைது செய்யக்கூடாது என தெரிவித்திருந்தது. இதனையடுத்து 6 பேரிடமும் முப்பத்தி மூன்று மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

 

இதனையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது விசாரணை அறிக்கையை குற்றப்பிரிவு போலீசார் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon