--- --:--:-- --

பனியில் சிக்கி உறைந்த நிலையில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்பு..!

2

ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் பணியில் சிக்கி உறைந்த நிலையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு இளைஞர்கள் மலைப்பகுதியில் காணவில்லை என்று புகார் வந்தது.

 

பனிப்பொழிவு அதிகமாக உள்ள நிலையில் உள்ளதால் மலைப்பகுதியில் அவர்களை தேடி வந்த மீட்பு படையினர் இரண்டு இளைஞர்களை பனியில் உறைந்த நிலையில் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இருவருக்கும் டாக்டர் ஆரத்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். காணாமல்போன மேலும் இரண்டு இளைஞர்களை மீட்புக்குழுவினர் தேடிவந்த நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon