4 வயது மகனை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை..!
நான்கு வயது மகனுக்கு பேச்சு வரவில்லை என்ற விரக்தியில் அவரது முகத்தில் தலையணையை வைத்து அமித்தி கொலை செய்ததாக கூறப்படும் தாய் தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த ஷோபா என்ற பெண்ணுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி ரித்திக் என்ற 4 வயது மகன் பிறந்துள்ளான். நான்கு வயதாகும் அவருக்கு பேச்சு வரவில்லை என்று கூறப்படுகிறது.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால் சோபா மன அழுத்தத்தில் இருந்துள்ளார். கடந்த 17ம் தேதி தாய் வீட்டிற்கு சென்று ஷோபா நேற்று அவர் இல்லாத நேரம் பார்த்து குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





