பாலியல் வன்கொடுமைக்கு உதவியதாக அண்ணி கைது !
கிருஷ்ணகிரியில் உறவுக்கார மாணவியை கள்ளக்காதலனுக்கு அறிமுகம் செய்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊத்தங்கரை விசுவாசம் பட்டியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் ஐடிஐ படித்து வரும் மாணவியை இரு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தேடி கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





