--- --:--:-- --

மகளுக்காக காதலனைத் தேடிய தாய்..!

12

மகளுக்காக காதலனை தேடிய தாய் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வருபவர் மெக் டேவிஸ். 61 வயதான இவர் 2004ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார்.

 

என்றாலும் 2020ஆம் ஆண்டில் அது தீவிரமடைந்து மெடா ஸ்டேட்டிக் மார்பக புற்று நோயாக மாறி மேலும் அவதிக்கு உள்ளாக்கியது. அது எலும்பையும் தாக்க தொடங்கியது. இந்த நிலையில் தனது 30 வயது மகளுக்காக செய்த செயல் தற்போது ஆன் லைனில் வைரலாக பரவி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

மகளின் சம்மதத்துடன் அவளுக்கான காதலனை தேடத் தொடங்கினார் மெக் டேவிஸ். அதற்காக மகளை பற்றிய விபரங்களுடன் விளம்பர பலகை ஒன்றை பொது இடத்தில் நிறுவினார். அதில் என் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

 

அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இது பற்றி கூறியுள்ள மகள் எனது அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார் அதுபோன்று ஒரு துணையை தான் நான் தேடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon