மலையாள நடிகர் மம்முட்டிக்கு கொரொனா தொற்று..!
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் நடித்து வந்த சிபிஐ 5 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.






