தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
தமிழகத்தில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் அரசின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதோடு அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா சிகிச்சை மையத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழிலாளர்களையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் தகவல்களை தினசரி ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.






