நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 31ம் தேதி துவக்கம்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 31ஆம் தேதி இந்த கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி இந்த நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் முதற்கட்டமாக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்டமாக மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் நடைபெறும்.






