நடிகை மானபங்கபடுத்தப்பட்ட வீடியோவை வீட்டில் பார்த்த திலீப்..!
பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் அவரது வீட்டிலிருந்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நண்பரான இயக்குனர் பாலச்சந்திர குமார் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகையை மானபங்கம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது வீட்டிலிருந்து பார்த்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் திலீப் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் அவர்களை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாகவும் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது மற்றும் அவரது சகோதரர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.





