ஒரே காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா..!
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு போலீசார் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 10 பேரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அங்கு உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.





