--- --:--:-- --

மதுப் பிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

9

முக கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon