--- --:--:-- --

அரசு மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களுக்கு கொரோனா..!

8

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

 

இந்த கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 மாணவர்களுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரியில் உள்ள விடுதிகள் மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

மேலும் மருத்துவ கல்லூரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon