மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை..!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று மருத்துவக் கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.





