--- --:--:-- --

ஏமாற்றிய காதலன்..விஷமருந்திய இளம்பெண்..!

2

தென்காசி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஏமாற்றிவிட்டதாக கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் வாக்குமூலம் வீடியோ வைரலாகி வருகிறது. ஐந்தாம் கட்டளை கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்ற என்பவருக்கும், சதீஷ் என்பவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்ததுடன் தனிமையில் சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.

 

இது ஊர் மக்களுக்கு தெரியவந்த நிலையில் செல்வமணியை சதீஷ் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளிக்க சென்றதாகவும் ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர் என்றும் அந்த பெண் நியாயம் கேட்டு சதீஷ் வீட்டிற்க்கு நேரடியாக சென்றுள்ளார்.

 

அங்கு சதீஷ் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் வீட்டின் முன்பு செல்வமணி தர்ணாவில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால் விஷமருந்தி செல்வமணி தனது வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

 

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon