பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி இருப்பதாக குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை..!
திருத்தணியில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட புளியில் பல்லி இருப்பதாக குற்றம் சாட்டியவரின் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நந்தன் என்பவர் அருகிலிருந்த ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளார்.
அப்பொழுது பரிசு தொகுப்பிலிருந்து புளியில் பல்லி இருப்பதாக குற்றம் சாட்டியது ஊடகங்களில் வெளியானது. அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அவர் மீது ரேஷன் கடை ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நந்தனின் மகன் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். தனது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






