தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலத்த காயம்..!
நத்தம் அருகே தடுப்பு சுவரின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். வேல்முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்றுள்ளார்.
நத்தம்பட்டி அருகே செல்லும்போது இரு சக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






