ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பு..!
ஆந்திராவில் அரசு ஊழியர் ஓய்வு வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் அரசு துறையின் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை பணியாற்றி வரும் லட்சக் கணக்கானோரின் சம்பள விகிதம், ஓய்வூதியம், பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்ட ஆணையத்தின் படி அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தவும், அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தியும் அறிவிப்பை வெளியிட்டார். இது ஜனவரி 2022ல் இருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.





