மருத்துவமனையில் இருந்து கோவிட் பாதித்த 13 பயணிகள் தப்பியோட்டம்..!
பஞ்சாபில் கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டதால் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 19 குழந்தைகள் உட்பட 179 பயணிகளுடன் மிலன் நகரில் இருந்து அமிர்தசரசுக்கு வந்த வெளிநாட்டு விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது 125 பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலானோர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் 13 பயணிகள் பூரணமாக குணமாகாத நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டனர். அவர்கள் இன்று காலைக்குள் வெளிவராவிட்டால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.





