--- --:--:-- --

பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கொரோனா திரிபு பரவல்..!

4

கொரொனாவ தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கொரொனா திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு பிரான்சில் பரவி வரும் இந்த வகை கொரொனா தொற்றுக்கு ஐ‌எச்‌யு என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

இதுவரை 12 பேருக்கு இந்த வகையான தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. கொரொனாவில் இருந்து 46 புதிய வகை கொரொனா உருமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே ஓமிக்ரான் கொரோனாவால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon