--- --:--:-- --

மேற்கு வங்கத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்..!

2

கொரொனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்கள், தியேட்டர்கள், அழகு நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஓமிக்ரான் அதிகரிப்பு மற்றும் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து உத்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

 

தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன.

 

உடற்பயிற்சி, நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு தடை விதித்து மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon