--- --:--:-- --

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 121ஆக அதிகரிப்பு..!

1

மிழ்நாட்டில் தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 597 இருந்து 1489 ஆக உயர்ந்துள்ளது. கொரொனாவின் புதிய திரிபான ஓமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

27 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். கொரொனா வேகமாக பரவி வரும் நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, 12 ஆயிரமாக இருந்த பரிசோதனைகள் 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

இதனை 30 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதையடுத்து நடந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon