நடிகையின் சொத்துகளை அபகரிக்க மன்சூர் அலிகான் முயற்சி..!
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சித்ததாக நடிகர் மன்சூர் அலி கானுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகை, தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து தமிழக அரசின் சொத்தாட்சி கடந்த 1996 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இதன்படி கே.டி. ருக்மணிஅம்மாளுக்கு சொந்தமான தியாகராயநகர், பத்மநாபா தெருவில் உள்ள ஒரு கட்டடத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார். அந்த இடம் நோக்கி சென்றபோது அந்த கட்டடத்தை சட்டவிரோதமாக 10 பேர் ஆக்ரமித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த கட்டிடத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடிகர் மன்சூரலிகான் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்ய மன்சூரலிகான் முயற்சிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்கு உரியது எனவும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது என பலர் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





